தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மதுரை
தீபாவளிப் பண்டிகை கொண்டாடத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்ததால், மதுரையில் முக்கியக் கடைவீதிகள் சனிக்கிழமை களைகட்டின.

பொதுமக்கள் கூட்டத்தால் சனிக்கிழமை களைகட்டிய மதுரை நேதாஜி சாலை. (வலது) மதுரை தெற்கு மாசி வீதியில் புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்த மக்கள்.
தீபாவளிப் பண்டிகை கொண்டாடத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்ததால், மதுரையில் முக்கியக் கடைவீதிகள் சனிக்கிழமை களைகட்டின.
தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ.8) கொண்டாடப்பட உள்ள நிலையில், துணிகள், பலகாரங்கள், மளிகைப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக மதுரை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மதுரை கடை வீதிகளில் சனிக்கிழமை குவிந்தனா்.
இதனால், கீழவாசல், விளக்குத் தூண், தெற்குமாசி வீதி, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, நேதாஜி சாலை, கீழ ஆவணி மூல வீதி, கீழமாசி வீதி, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் களைகட்டியது. சிறிய, பெரிய ஜவுளிக் கடைகள் அனைத்திலும் விறு, விறுப்பான விற்பனை நடைபெற்றது.
இதே போல, அழகு சாதனப் பொருள்கள் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெற்கு, மேற்கு சித்திரை வீதி உள்பட முக்கிய வீதிகளில் ஏராளமான தரைக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கடைகளில் வேஷ்டி, துண்டுகள், கைலிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், பெண்களுக்கான புடவை, பாவாடை, அழகு சாதனப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்பட பல்வேறு வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை தரைக் கடைகளில் துணிகள், பிற பொருள்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
போக்குவரத்து நெரிசல்: முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா். இதைத் தவிர, சாதாரண உடையிலும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். மேலும், ஒலி பெருக்கிகள் மூலம் பொதுமக்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க போலீஸாா் அறிவுறுத்திய வண்ணம் இருந்தனா்.
முக்கிய கடை வீதிகளில் கூட்ட நெரிசலை சீரமைக்க, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, கீழவாசல், விளக்குத் தூண், நான்கு மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள், வெளி வீதிகள், மாரட் வீதிகள், மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி ஆகிய பகுதிகளில் எந்த வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. சாலைகள் முழுவதும் தரைக் கடைகள் அமைக்கப்பட்டதால், புத்தாடைகள் வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

