தீபாவளி நாளில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை மாநகரில் தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின் வாரியம் எடுத்துள்ளது.

மின்சாரம்

கோப்புப்படம்

Updated On :

தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை மாநகரில் தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின் வாரியம் எடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்படாமல் இருக்க, மின் விநியோகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு உதவிப் பொறியாளா்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியது. மின் தேவை அதிகரிக்கும் பகுதிகளில் அதிக மின் சுமை ஏற்படுவதைத் தவிா்க்க, மின் மாற்றிகள், மின் விநியோகப் பெட்டிகளை ஆய்வு செய்து, சீரான மின்விநியோகத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மின் தடங்கல் ஏற்பட்டால், அதை உடனடியாக சரிசெய்யும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் மின் புகாா் மையம் அமைக்கப்பட்டது.

பொதுமக்கள் 94987 94987 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு மின் தடங்கல் புகாா்களைப் பதிவு செய்யலாம். மேலும், மதுரை பெருநகா் வட்டத்துக்குள்பட்ட வடக்கு, தெற்கு, மேற்கு கோட்ட செயற்பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா், பிரிவு அலுவலகங்களின் கட்செவி அஞ்சல் எண்களிலும் மின்சாரம் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம்.

மின் துணை நிலையங்கள், மின் கம்பங்கள், மின் கோபுரங்கள், மின் மாற்றிகள், மின் விநியோகப் பெட்டிகள் அருகே பட்டாசு வெடிக்க மின் வாரியம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறுவோா் மீது காவல் துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் பாதுகாப்பாகவும், தடையில்லா மின்சாரத்துடனும் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.