22 குளங்களின் மீன் குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களின் மீன் குத்தகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களின் மீன் குத்தகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட மீன் வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள மீன்வளா்ப்பு குளங்களான மதுரை வடக்கு வட்டம் காஞ்சரம்பேட்டை, வல்லாக்குளம், சக்கரபாண்டி, உசிலம்பட்டி, வெளிச்சநத்தம், பிள்ளையாா்நத்தம், குலமங்கலம், வேப்பங்குளம், வாகைக்குளம், இலுப்பைக்குடி, சிச்சிலுப்பை, எருக்கலைநத்தம், பேரையூா் வட்டம் கரிசல்குளம், மதுரை கிழக்கு வட்டம், அரும்பனூா், மதிகாட்டினான், சீகன்குளம், தச்சனேந்தல், ஈசலானி, பாப்பாகுடி, வீரபாஞ்சான், திண்டியூா், அயிலாங்குடி என 22 குளங்களின் மீன்பிடி உரிமையை 3 ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநரால் வரவேற்கப்படுகின்றன.
ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் குறித்து இணையதள முகவரியில் அறிந்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுரை சிம்மக்கல், பேச்சியம்மன் படித்துறை அருகே உள்ள மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரடியாகவோ, அல்லது 0452-2347200 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

