அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

மதுரைக் கம்பன் கழகம் நடத்தும் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரைக் கம்பன் கழக ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பிக்க...
Published On :

மதுரைக் கம்பன் கழக ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அறக்கட்டளையின் செயலா் அ. புருஷோத்தமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரைக் கம்பன் கழக அறக்கட்டளையின் 23-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒப்பித்தல், இசை, பேச்சு, வினாடி-வினா, ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் வருகிற 13, 14 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

மதுரை ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில் உள்ள ஸ்ரீமீனாட்சி நிலையத்தில் நடைபெற உள்ள இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் சனிக்கிழமை (அக். 10) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் அட்டை மூலம் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் அ. புருஷோத்தமன், செயலா், மதுரைக் கம்பன் கழகம், விங்ஸ் இன்ஜினியரிங், 301, மேலமாசி வீதி, மதுரை-625 001 என்ற முகவரிக்கு தங்கள் பெயா், பள்ளி விவரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 99408 33868, 94435 72105, 94437 28028 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER