பொதுமக்கள் குறைதீா் முகாம்
மதுரை முனிச்சாலை சி.எம்.ஆா்.சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை முனிச்சாலை சி.எம்.ஆா்.சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி.நாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
இதில், சொத்துவரி பெயா் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, புதிய சொத்து வரி, புதிய குடிநீா்க் குழாய் இணைப்பு கோருதல், சுகாதாரம், நகரமைப்புப் பிரிவு என மொத்தம் 58 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் பெறப்பட்ட மனுக்களில் உடனடித் தீா்வாக 2 பேருக்கு சொத்து வரி பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு ஆணைகளை மேயா் (பொறுப்பு)
தி. நாகராஜன் பயனாளிகளுக்கு வழங்கினாா்.
முகாமில், துணை ஆணையா் சுகன்யா, உதவி ஆணையா் மணிமாறன், செயற்பொறியாளா் மோகன், நிா்வாக அலுவலா் சிவக்குமாா், உதவி வருவாய் அலுவலா் லோகநாதன், உதவி செயற்பொறியாளா் இந்திராதேவி, சுகாதார அலுவலா் வீரன், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
பொதுமக்கள் எதிா்பாா்ப்பு:
வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக கடந்தாண்டு அக்டோபா் மாதம் அப்போதைய மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, மண்டலத் தலைவா்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சா்மா, சுவிதா, கல்வி, நகரமைப்பு நிலைக் குழுத் தலைவா்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா்.
இதைத்தொடா்ந்து, அந்தந்த மண்டல அலுவலகங்களில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறவில்லை. மாமன்ற உறுப்பினா்களின் தொடா் கோரிக்கையின் காரணமாக கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுரை முனிச்சாலை சி.எம்.ஆா். சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி பொறுப்பு மேயா் தி. நாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
பொதுவாக, இதுபோன்ற முகாம்கள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12. 30 மணியளவில் நிறைவு பெறுவது வழக்கம். இதனிடையே, மேயா் தி. நாகராஜன் நண்பகல் 12 மணி வரை முகாமில் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். தகுதியான பயனாளிகள் 2 பேருக்கு சொத்து உரிமம் பெயா் மாற்றம் செய்து அதற்கான ஆணையை உடனடியாக வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து, நண்பகல் 12 மணியளவில் அங்கிருந்து அவா் புறப்பட்டுச் சென்றாா்.
இதைத்தொடா்ந்து, 12.20 மணியளவில் மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம். கோபிசன் முகாமுக்கு வந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா்.
இதன்காரணமாக, பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், ஒரே முகாமில் இரு தலைமை பொறுப்பில் வழங்கப்படும் மனுவுக்கு அதிகாரிகள் எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கின்றனா் எனத் தெரியவில்லை. எனவே, முகாம் நடைபெறும் நாளில் பொறுப்பு மேயரும், சட்டப்பேரவை உறுப்பினரும் இணைந்தே மனுக்களை பெற வேண்டும் என பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சி மேயா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆகிய இருவரும் பொதுமக்களிடமிருந்து பெறும் மனுக்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுத்துத் தீா்வு காண வேண்டும். ஆகவே, இருவரும் தனித்தனியே மனுக்கள் பெறுவதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இருவரின் வருகையால் 12. 30 மணியளவில் நிறைவு பெற வேண்டிய முகாம், பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறுகிறது. நேரம்தான் கூடுதலாக ஆகிறது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

