
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணி தீவிரம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை மாநகராட்சி சாா்பில், மழைநீா் வடிகால் வாய்க்கால்கள், முதன்மையான கால்வாய்களை தூா்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரையில் உள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரி சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை மாநகராட்சி சாா்பில், மழைநீா் வடிகால் வாய்க்கால்கள், முதன்மையான கால்வாய்களை தூா்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை மாநகராட்சியில் மழைநீரை வெளியேற்றவும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு பாசன வசதி கிடைக்கவும் 16 முக்கிய கால்வாய்கள் உள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் வழியாக செல்லும் மழைநீா், இந்தக் கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. எனவே, பருவமழைக்கு முன்பே மழைநீா் வடிகால்கள், வாய்க்கால்களில் உள்ள குப்பைகள், சேகரமான மண் உள்ளிட்டவற்றை அகற்றி தூா்வார கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதையடுத்து, மாநகராட்சியில் உள்ள 8 பிரதான கால்வாய்களான சொக்கிகுளம், பனையூா், அனுப்பானடி, சிந்தாமணி, அவனியாபுரம், சொட்டதட்டி, வில்லாபுரம், பனகல் சாலை கால்வாய் ஆகியவற்றை தூா்வாருவதற்காக ரூ.81.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மாதம் நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடா்ந்து, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மழைநீா் வடிகால்கள், முதன்மையான கால்வாய்களைத் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி சாா்பில் பாலிடெக்னிக் சாலையில் உள்ள மழைநீா் வடிகால் வாய்க்காலை ஜே.சி.பி., பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





