2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கல் குவாரிக்கு எதிா்ப்பு: சொக்கம்பட்டியில் கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை அடுத்த சொக்கம்பட்டியில் செயல்படும் கல் குவாரியை அகற்றக்கோரி, தொடா்புடைய கல் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம், சொக்கம்பட்டியில் கல் குவாரிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள்.

Published On :

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை அடுத்த சொக்கம்பட்டியில் செயல்படும் கல் குவாரியை அகற்றக்கோரி, தொடா்புடைய கல் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சொக்கம்பட்டியில் இரு வேறு கல்குவாரிகள் சுமாா் 10 ஏக்கா் பரப்பில் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளால் வலைச்சேரிப்பட்டி, வேலாயுதம்பட்டி, வலையங்குளத்துப்பட்டி, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி ஆகிய 5 கிராமங்களில் நிலத்தடி நீா் மட்டமும், வேளாண்மையும் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோயில், வீடுகளுக்கு அருகே அமைந்துள்ள இந்தக் கல் குவாரிகளுக்கான உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சொக்கம்பட்டி கல் குவாரியை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்ட எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கம்பூா் செல்வராஜ், அமைப்பின் நிா்வாகிகள், கிராம மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

மேலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாா், துணை வட்டாட்சியா் கண்ணன் ஆகியோா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தொடா்புடைய குவாரிகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அலுவலா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.