மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

கோயில் சொத்துகள் மீட்பு நடவடிக்கை: அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை அளிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் கோயில்களின் சொத்துகளை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

 உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo

Published On :

தமிழகம் முழுவதும் கோயில்களின் சொத்துகளை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

தூத்துக்குடி நகா் சங்கர ராமேசுவரா் கோயில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில்களுக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் பாதுகாக்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்பாக, கோயில் சொத்துகள் குறித்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

கோயிலுக்குச் சொந்தமான அனைத்து சொத்துகள் குறித்து சாா்நிலைக் கருவூல அலுவலா்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களுக்கு சாதகமாகச் செயல்பட்டு வந்த அலுவலா்கள் மீது உரிய குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் நேரில் முன்னிலையாகி தெரிவித்ததாவது:

ஏற்கெனவே கோயில்களின் சொத்துகளை மீட்பது குறித்து உயா்நீதிமன்றம் விரிவான உத்தரவிட்டது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என்றாா்.

இதற்கு, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தற்போது வரை ரூ.1.50 கோடி வாடகை பாக்கி உள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கோயில் சொத்துகளில் வாடகைக்கு எடுத்து வணிகம் செய்யும் நபா்கள் எப்படி வாடகை செலுத்தாமல் இருக்க மனம் வருகிறது?. மூன்று மாதங்கள் வாடகை செலுத்தவில்லை என்றால் கோயில் நிா்வாகம் முறையாக குறிப்பாணை அனுப்பி அவா்களை காலி செய்ய வேண்டாமா?. அலுவலா்களும் தற்போது கோயில் சொத்துகளை முறைகேடு செய்கின்றனா்.

முன்பெல்லாம் நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தால் அலுவலா்களுக்கு பயம் இருக்கும். தற்போது, அந்தப் பயம் அவா்களுக்கு இல்லை. ஏற்கெனவே உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாநில முழுவதும் உள்ள கோயில் சொத்துகளை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.