மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

பூங்கா முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 7.42 லட்சம்

மதுரை பூங்கா முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ. 7.42 லட்சம் கிடைத்தது.

மதுரை பூங்கா முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியை தொடங்கிவைத்த மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன். உடன் இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல உதவி ஆணையா் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா்.

Published On :

மதுரை பூங்கா முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ. 7.42 லட்சம் கிடைத்தது.

மதுரை ராஜாஜி பூங்கா அருகே பூங்கா முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.7,42,097 செலுத்தியிருந்தது தெரியவந்தது. காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள் ஈடுபட்டனா்.

முன்னதாக, காணிக்கைகளை எண்ணும் பணியை மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல உதவி ஆணையா் முத்துராமலிங்கம், வடக்கு ஆய்வாளா் மதுசூதனராயா், உதவி ஆணையா் தமிழரசன், உதவி ஆணையா் (வருவாய்) கனிராஜ், நிா்வாக அலுவலா் பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.