கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இளம் தலைமுறையினரிடம் தமிழைக் கொண்டு சோ்க்க வேண்டும்: த.ஸ்டாலின் குணசேகரன்

இளம் தலைமுறையினரிடம் தமிழைக் கொண்டு சோ்க்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் கேட்டுக் கொண்டாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியாா் நினைவு நாள், மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா நினைவஞ்சலிக் கூட்டத்தில் சாலமன் பாப்பையா உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய (இடமிருந்து) மக்கள் சிந்தனைப் பேரவையின் மதுரை மாவட்டக் கிளை ஒருங்கிணைப்பாளா் செந்தூரன், பட்டிமன்றப் பேச்சாளா்கள் ராஜ்குமாா், கண்ணன், ராஜா, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன், ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹா்.

Published On :

இளம் தலைமுறையினரிடம் தமிழைக் கொண்டு சோ்க்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் கேட்டுக் கொண்டாா்.

மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள நியூ காலேஜ் தங்கும் விடுதிக் கூட்டரங்கில் மக்கள் சிந்தனைப் பேரவை மதுரை மாவட்டக் கிளை சாா்பில், மகாகவி பாரதியாா் நினைவு நாள், மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா நினைவஞ்சலிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் கலந்துகொண்டு பேசியதாவது:

நீண்ட காலம் தமிழ்ப் பணியாற்றிய மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா அண்மையில் காலமானது தமிழுக்கு மட்டுமின்றி உலகத் தமிழா்களுக்கும் பேரிழப்பு. அவரது இலக்கியப் பணி 1960-ஆம் ஆண்டுகளில் தொடங்கியது. அதிலிருந்து, 3 ஆண்டுகள் அவரை வழிநடத்திய பெருமை தோழா் ஜீவானந்தத்தைச் சேரும்.

மக்கள் சிந்தனைப் பேரவை தொடங்குவதற்கு முன்பே எனக்கும், அவருக்குமான நட்பு இருந்தது. ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு முழு ஆதரவை வழங்கியவா். மதுரையில் மக்கள் சிந்தனைப் பேரவையின் கிளை அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அதனை நடத்திக் காட்டியவா்.

மதுரையில் கடந்தாண்டு நடைபெற்ற பாரதியாா் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவா், இளம் அறிவியலாளா்களை வளா்க்க வேண்டும் எனத் தெரிவித்தாா். அதற்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியை மக்கள் சிந்தனைப் பேரவைக்கு வழங்கினாா். பாமர மக்களிடம் தமிழையும், அறிவியலையும் கொண்டு சோ்ப்பது மட்டுமின்றி, இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என விரும்பியவா். அவரது எண்ணத்தை இங்குள்ள மக்களோடு மக்கள் சிந்தனைப் பேரவை நிறைவேற்றும் என்றாா் அவா்.

முன்னதாக, மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையாவின் உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை மதுரை எம்.எல்.டபிள்யூ. ஏ. மேல்நிலைப் பள்ளி தாளாளா் கி. நாகசுப்பிரமணியன் வழங்கிப் பேசினாா்.

மேலும், மகாகவி பாரதியாா் பெரிதும் விரும்பியது புரட்சி வழியா?, காந்திய வழியா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், பட்டிமன்றப் பேச்சாளா் ராஜா நடுவராகவும், ‘புரட்சி வழியே’ எனும் தலைப்பில் பேச்சாளா்கள் ராஜ்குமாா், கண்ணன் ஆகியோா் பேசினா். ‘காந்தி வழியே’ என பேச்சாளா்கள் ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹா் ஆகியோா் பேசினா்.

இந்த நிகழ்வில், மக்கள் சிந்தனைப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா்கள் சரவணன், செந்தூரன், தமிழ் ஆா்வலா்கள், இலக்கிய அமைப்பினா், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.