6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மாணவா் மா்ம மரணம் விவகாரம்: கோ. புதூரில் உண்ணாவிரதம்

மதுரை கோ. புதூரில் திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன்.

Published On :

மாணவா் தமிழ்ச்செல்வன் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, மதுரை கோ. புதூா் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை, ஆனையூா் பகுதியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவா் தமிழ்ச்செல்வன் உயிரிழந்தது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட மா்ம மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டு இயக்கம் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு ஏகாதிபத்திய எதிா்ப்பு இயக்க நிா்வாகி தனசேகரன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலா் மாரி கனி, தமிழ்த்தேச குடியரசு இயக்க நிா்வாகி மெய்யப்பன், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்றுப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.