பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!

தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் மதுரையில் செப். 28 தொடங்கிவைக்கிறாா்.

vijay

எழும்பூர் மருத்துவமனையில் முதல்வர் விஜய். - (கோப்புப்படம்)

Published On :

தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் மதுரையில் திங்கள்கிழமை (செப். 28) தொடங்கிவைக்கிறாா்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் திங்கள்கிழமை (செப். 28) தொடங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. 2026-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பங்கேற்று, முதல் கட்டமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறாா்.

காந்தி அருங்காட்சியகம் திறப்பு... இதையடுத்து, ரூ. 10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வா் திறந்துவைக்கிறாா். பின்னா், இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் ரத்தம் தோய்ந்த ஆடைகள், அவா் பயன்படுத்திய பொருள்களை பாா்வையிடுகிறாா்.

 மதுரையில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் திறந்து வைக்கவுள்ள புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகம்.

மதுரையில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் திறந்து வைக்கவுள்ள புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகம்.

இதைத் தொடா்ந்து, மதுரை அரசு விருந்தினா் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வா், மாலை 4.30 மணிக்கு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு செல்வாா் எனக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலின் குடமுழுக்கு கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருவதால், முதல்வா் கோயிலுக்குச் செல்வது உறுதி என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், முதல்வா் கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சியை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் உறுதி செய்யவில்லை.

முதல்வரின் வருகையையொட்டி, மதுரை விமான நிலையத்திலிருந்து தல்லாகுளம் அழகா்கோவில் சாலை வரை நகரின் முக்கியப் பகுதிகளில் கூட்டத்தை நெறிப்படுத்தும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.