/

மாணவர் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய சரகம் சுவாத்தானைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவரது மகன் நந்தகுமார் (19). சிவ

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:23 pm

தினமணி

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய சரகம் சுவாத்தானைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவரது மகன் நந்தகுமார் (19). சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

  புத்தாண்டு தினத்தில் ஊருக்கு வந்திருந்த நந்தகுமார் அதிக செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. திரும்ப கல்லூரிக்குச் செல்ல பணமில்லாமல் தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது தாயார் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த நந்தகுமார்,  வீட்டில் விஷம் குடித்து மயங்கினார்.

  பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நந்தகுமார், சிகிச்சை பயனின்றி இறந்தார். இதுகுறித்து கீழத்தூவல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.