மணக்குடி இளைஞர் கொலை: 2 பேருக்கு ஆயுள் சிறை: ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
இளைஞர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.


இளைஞர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராசு மகன் ராமநாதன் (28). இவர் வேலை செய்யாமல் சும்மா இருப்பதாக, அதே ஊரைச் சேர்ந்த சரவணக்குமார்(25), அவரது நண்பர் தினேஷ்பாபு(29) ஆகியோர் சேர்ந்து கேலி செய்தனராம். இதனால் ஏற்பட்ட தகராறில் ராமநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 2004 ஜூன் 12 இல் இச்சம்பவம் நடந்தது. சரவணக்குமார், தினேஷ்பாபு ஆகிய இருவரையும் திருப்பாலைக்குடி போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் நீதிபதி லிங்கேசுவரன் ஆயுள் தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...