அபிராமத்தில் பால் முகவருக்கு அரிவாள் வெட்டு

கமுதி அருகே அபிராமத்தில் புதன்கிழமை பால் முகவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.
Updated on
1 min read

கமுதி அருகே அபிராமத்தில் புதன்கிழமை பால் முகவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.
  அபிராமத்தை சேர்ந்த ஜவஹிருல்லா மகன் செய்யது இப்புராஹிம் ஹசன்(34). இவர் அபிராமத்தில் தனியார் பால் நிறுவன மொத்த விற்பனை முகவராக தொழில் செய்து வருகிறார். இவர் புதன்கிழமை பகல் 11 மணியளவில் அபிராமம் கடை வீதி பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 பேர், இரு சக்கர வாகனத்தில் வந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.  
  பலத்த காயம் அடைந்த  செய்யது இப்புராஹிம் ஹசன் கமுதி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்தப் புகாரின்பேரில், அபிராமம் போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com