ராமநாதபுரம் நேரு நகர் 2 ஆவது தெருவில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் நேருநகரில் 10 தெருக்கள் உள்ளன. இவற்றில் 2 ஆவது தெரு பகுதியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இத்தெருவுக்கு மட்டும் கடந்த 4 மாதங்களாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வர வேண்டிய குடிநீர் வராமல் உள்ளது.
இதனால் இப்பகுதியில் வசிப்போர் பக்கத்து தெருவுக்கு சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக நேருநகர் 2 ஆவது தெருவுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ராமநாதபுரம் நேருநகர் 2 வது தெருவில் வசிக்கும் பணி ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை உதவி இயக்குநர் அசோகன் கூறியது:
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தான் நேரு நகர் 2 ஆவது தெருவுக்கு குடிநீர் வந்தது. தற்போது கடந்த 4 மாதங்களாக குடிநீர் வரவில்லை. அது ஏன் எனத் தெரியவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சரி செய்து தருவதாக சொல்கிறார்களே தவிர பழுதை நீக்காமல் மெத்தனம் காட்டி வருகிறார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நேருநகர் 2 ஆவது தெருவுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








