மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்
திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ். மங்கலத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன்


திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ். மங்கலத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை புத்தாக்கப் பயிற்சி முகாம் தொடங்கியது.
இப்பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனகாளீஸ்வரி தொடக்கி வைத்தார். 3 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் 20 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவிகள் தங்களது தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது தங்களது திறனை வளர்த்து கொள்வது, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.இதில் சிறப்பு ஆசிரியர்கள் சாரதா, எமர்சிராணி, அலெக்ஸ் அருள்ராஜன், மாலதி ஆகியோர் ஆசிரியர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் பயிற்சி அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...