விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா

ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் சங்க நிறுவனர் தின விழா, விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் என்ற நூல் வெளியீட்டு விழா, நல்லாசிரியை கிளாடிஸ் ஜெயக்குமாரி நினைவு நாள் விழா ஆகிய

Updated On :14 மே 2018, 6:26 pm

ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் சங்க நிறுவனர் தின விழா, விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் என்ற நூல் வெளியீட்டு விழா, நல்லாசிரியை கிளாடிஸ் ஜெயக்குமாரி நினைவு நாள் விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பேராசிரியர்.ரா.வேலு தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் மை.அப்துல்சலாம் அனைவரையும் வரவேற்றார். தமிழ்ச்சங்க நிறுவனர் அமரர்.எஸ்.எம்.கமாலின் உருவப்படத்தை சங்கத்தின் பொருளாளர் கா.மங்களசுந்தரமூர்த்தி திறந்து வைத்தார். தொடர்ந்து சங்க நிறுவனர் எஸ்.எம்.கமாலைப் பற்றி கவிஞர்கள் மு.ஹிதாயத் துல்லா, நா.வேலுச்சாமிதுரைஆகியோரின் கவிதாஞ்சலி நடைபெற்றது. சங்க செயலாளரும், கண் மருத்துவருமான பொன்.சந்திரசேகரன் நினைவும், கனிவும் என்ற தலைப்பில் பேசினார்.
விழாவில் கம்பத்தை சேர்ந்த கவிஞர் பரதன் தான் எழுதிய விடுதலைக் களத்தில் முஸ்லீம்கள் என்ற நூலினை வெளியிட அதன் முதல் பிரதியை சங்கத்தின் துணைத் தலைவர் குழ.விவேகானந்தன் பெற்றுக் கொண்டார். மற்ற இரு பிரதிகளையும் சங்க துணைத் தலைவர் வைகிங் எம்.எஸ்.கருணாநிதியும், கவிஞர் தஸ்லீம்காஜாவும் பெற்றுக்கொண்டனர். நூலினை ஆய்வு செய்து ஆசிரியர் தேவி.ரா.உலகராஜ் குறும்படம் மூலம் விளக்கிப் பேசினார்.
வாலிவதையில் வள்ளுவம் என்ற தலைப்பில் மருத்துவர் ரா.குலசேகரனும், நல்லாசிரியை கிளாடிஸ் ஜெயக்குமாரி நினைவுச் சொற்பொழிவாக அய்யன் திருக்குறளில் அறிவியல் ஆயிரம் என்ற தலைப்பில் தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் ரெ.சந்திரசேகரனும் பேசினார்கள். விழாவில் கவிஞர்கள் உரப்புளி ஜெயராமன், மாணிக்கவாசகம், ஆசிரியை தமிழரசி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.