இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்கம்

ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. 
இவ்விழாவில் அக்கல்லூரியின் முதல்வர் கீதா.மாணிக்க நாச்சியார் தலைமை வகித்தார். விழாவிற்கு பேராசிரியைகள் முத்தாலேஸ்வரி, ஜெனட், ஜாஸ்மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
எழுத்தாளரும், திரைப்பட நடிகருமான வேல.ராமமூர்த்தி பங்கேற்று  மாணவியர் பேரவையை துவக்கி வைத்து, மணப்பெண் அலங்காரப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.  
 ஒவ்வொருவரும் எதிலாவது சாதனைகள் புரிய வேண்டும் என்பதை லட்சியமாக்கிக்  கொள்ளுங்கள்.  இலக்கியங்களை  அதிகமாக  படித்ததால்  தான் என்னால் எழுத்தாளனாக முடிந்தது.  கலைகளை நேசித்து அதில் நேரத்தை  செலவிடுங்கள்.
 நடிகன் என்பதை விட எழுத்தாளன் என்று சொல்வதையே விரும்புகிறேன். ராமநாதபுரத்தை ஆண்ட சேதிபதி மன்னர்களின் வாழ்க்கை வரலாறுகளை அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
   விழாவில் மாணவியர் பேரவையின் நிர்வாகிகளாக மாணவியர்கள் டி.திவ்யபாரதி (தலைவர்), வி.அபர்ணா (துணைத் தலைவர்), ஆர்.ரதிப்பிரியா (செயலாளர்)  உள்பட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். 
பேராசிரியர் ராஜேஷ் கண்ணா வரவேற்று பேசினார். நிறைவாக பேரவைத் தலைவர் டி.திவ்யபாரதி நன்றி கூறினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.