முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

இளைஞரைத் தாக்கி செல்லிடப்பேசி, நகை, பணம் பறிப்பு: 4 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே  செவ்வாய்க்கிழமை இரவு இளைஞரைத் தாக்கி ரூ.47,300 மதிப்பிலான பொருள்களை பறித்துச் சென்றுள்ளனர்.

Published On :

ராமநாதபுரம் அருகே  செவ்வாய்க்கிழமை இரவு இளைஞரைத் தாக்கி ரூ.47,300 மதிப்பிலான பொருள்களை பறித்துச் சென்றுள்ளனர்.
ராமநாதபுரம் அருகே பனைக்குளம் தெற்குத்தெருவைச் சேர்ந்த செய்யது முகம்மது மகன் நிகால் அஹமது(21). இவர் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை தெற்குகாட்டூர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது  திடீரென 4 பேர் கொண்ட கும்பல் அவரைத் தரக்குறைவாக பேசியும், தாக்கியும் அவரிடமிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசி, ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.2300 மதிப்பிலான வெள்ளிச் சங்கிலி உள்பட ரூ.47300 மதிப்பிலான பொருள்களை பறித்து சென்று விட்டனராம். தாக்குதலில் காயம் அடைந்த நிஹால் அஹமது ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
சம்பவம் தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் தெற்குகாட்டூரைச் சேர்ந்த தர்மராஜ் மகன் நாகவேல், அதே ஊரைச் சேர்ந்தவர்களான சூரப்புலி மகன் கார்த்திக், வாலாந்தரவை அம்மன் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர்களான மதி மகன் மகேந்திரன், ஆறுமுகம் மகன் சீம்சுந்தர் ஆகிய 4 பேர் மீதும் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.