ராமநாதபுரத்தில் மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் பேருந்து நிலைய வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடத்தப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறையின் மதுவிலக்கு தடுப்பு பிரிவு சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமை வகித்தார். இதில் கலால் மதுவிலக்கு ஆயத்தீர்வை உதவி ஆணையர் ரவிச்சந்திரன், ஆயத்தீர்வைத்துறை கோட்ட அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுவிலக்கு விழிப்புணர்வுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணாதுரை உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். நிலா கலைக்குழுவினர் ராமநாதபுரம் நகர் பேருந்து நிலையத்தில் கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் ஆட்டம் ஆகியவற்றின் மூலம் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது மதுவின் தீமைகளை விளக்கும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டன. இப்பிரசார கலை நிகழ்ச்சிகள் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |

தமிழகத்தில் மே 23 வரை மழைக்கு வாய்ப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 17-05-2026

சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்த ஆர்சிபி!
விடியோக்கள்

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
