உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தில் விவேகானந்தர் ஜயந்தி விழா

ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 27) சுவாமி விவேகானந்தர் ஜயந்தி விழா நடைபெறவுள்ளது.

Updated On :24 ஜனவரி 2019, 12:35 am IST

ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 27) சுவாமி விவேகானந்தர் ஜயந்தி விழா நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் கூறியதாவது: ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் 157 ஆவது ஜயந்தி விழா நடைபெறவுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 27) காலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழாவுக்கான பூஜைகள் தொடங்குகின்றன. 
 பின்னர் காலை 7 மணிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. அதன்பின் காலை 9 மணிக்கு பஜனை நடைபெறும். பஜனைக்குப் பின்னர் உலக நன்மைக்காக ஹோமம் நடைபெறுகிறது. பின்னர் நடைபெறும் ஆன்மிகச் சொற்பொழிவில் ஆன்மிக உரையாளர்கள் பங்கேற்கின்றனர். இதன் பின் அர்ச்சனையும், மங்கள ஆரத்தியும் நடைபெறுகிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.