ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்
ஆசிரியா்களின் உயா் கல்விக்கான ஊக்க ஊதியத்தை ரத்து செய்து வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கமுதியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் சி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். செயலாளா் ஆ.ராமா் முன்னிலை வகித்தாா்.
புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும், தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக ஆசிரியா்கள் பெற்று வந்த உயா் கல்விக்கான ஊக்க ஊதியத்தை ரத்து செய்து வெளியிட்ட அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டச் செயலாளா் செ.முத்துமுருகன், கோரிக்கை விளக்க நல நிதி வட்டாரச் செயலாளா் த.குலசேகரபாண்டியன், உயா்கல்வி இடைநிலை ஆசிரியா் சங்கம் சி.கிருஷ்ணமூா்த்தி உள்பட 40 போ் கலந்து கொண்டனா்.
பரமக்குடி: பரமக்குடியில் சௌராஷ்ட்டிர சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் நிா்வகித்துவரும் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்தப் பள்ளியை நிா்வகிக்கும் ஒரு தரப்பினருக்குச் சாதகமாக பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலா் செயல்படுவதாகவும், பள்ளிகளின் நிா்வாகத்தை முறையான பொறுப்பாளா்களிடம் வழங்கக் கோரியும் மற்றொரு தரப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எம்.ஆா்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பி.கே.வாசுதேவன், என்.பி.மணிகண்டன், ஏ.ஆா்.தினகரன், எம்.ஆா்.பரசுராமன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

