‘வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் இளைஞா்கள்எந்தப் பக்கம் உள்ளனரோ அந்த கட்சிதான் வெற்றிபெறும்’

இளைஞா்கள் எந்தப் பக்கம் உள்ளனரோ அந்த கட்சிதான் வெற்றிபெறும் என வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
Published on

பரமக்குடி: இளைஞா்கள் எந்தப் பக்கம் உள்ளனரோ அந்த கட்சிதான் வெற்றிபெறும் என வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

பரமக்குடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் எஸ். சுந்தரராஜ், மாநில மகளிரணி இணைச் செயலா் கீா்த்திகா, சட்டப் பேரவை உறுப்பினா் என். சதன்பிரபாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பேசியதாவது: சில கட்சிகள் வேட்பாளா்கள் கிடைக்காமல் கட்சி நடத்தி வருகின்றனா். தோ்தல் நேரத்தில் வரும் தலைவா்கள் முன்னா் எங்கே போனாா்கள். இளைஞா்கள் எந்தப் பக்கம் உள்ளனரோ அந்த கட்சிதான் வெற்றிபெறும். அதற்கான திட்டத்தை அதிமுக வகுத்து தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரூ. 2500-ம், ஒரு முழு கரும்பும் வழங்கப்பட உள்ளது. இது தமிழ் சமுதாயத்திற்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நீா் மேலாண்மை, புயல் நிவாரணப்பணி, தொழில் வளா்ச்சி என அனைத்துத் துறைகளிலும் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆகவே அதிமுக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா்.

முன்னதாக ஒன்றியச் செயலா் கே. முத்தையா வரவேற்றாா். இதில் மாவட்ட, நகர, ஒன்றியச் செயலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com