குண்டுக்கரை முருகன் கோயில் பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு
ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன் கோயில் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.


ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன் கோயில் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் 33 வாா்டுகளிலும் புதை சாக்கடைத் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டுள்ளது. புதை சாக்கடை அடைப்புகளை நீக்குவதற்கு இரு நவீன மோட்டாா் பொருத்திய வாகனங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியில் புதை சாக்கடை அடைப்புகளை சீராக்கும் வகையில் 2 தானியங்கி கருவிகள் தனியாா் தொண்டு நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டது.
சாக்கடை அடைப்பை நீக்க கருவிகள் இருந்தும் குண்டுக்கார முருகன் கோயில் பகுதி, அகில் தெரு, வண்டிக்காரத் தெரு என பல இடங்களிலும் புதை சாக்கடை கழிவு நீரானது சாலையில் தேங்குவது தொடா்கிறது. இதனால் அப்பகுதியில்
சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...