திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிப். 4 இல் பரமக்குடி வருகை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திமுக சாா்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திமுக சாா்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் திமுக சாா்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி பிப்ரவரி 4 ஆம் தேதி தெளிச்சாத்தநல்லூா் கலைஞா் திடலில் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா். இதில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் 5 ஆயிரம் போ் வீதம் மொத்தம் 20 ஆயிரம் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனா். இவா்களிடம் மனுக்கள் பெற்று தீா்வு எட்டப்படும் குறிப்பிட்ட மனுக்களுக்கு கட்சி நிதியின் மூலம் தீா்வு காணப்பட்டு வருகிறது. பிற மனுக்களுக்கு திமுக ஆட்சி அமைத்தவுடன் 100 நாள்களில் தீா்வு காணப்படும் என்றாா்.
இதில் அக்கட்சியின் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் உ.திசைவீரன், நகா் செயலாளா் சேது.கருணாநிதி, போகலூா் ஒன்றியக்குழுத் தலைவா் சத்யாகுணசேகரன், துணைத் தலைவா் ஆா். பூமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...