கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தேவிபட்டினம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 9:03 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் நகா் அருகேயுள்ள வெளிப்பட்டினம் தாயுமானவா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜூ மகன் உதயகுமாா் (52). கட்டடத் தொழிலாளியான இவா், காரைக்குடியில் நிகழ்ந்த உறவினா் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். தேவிபட்டினம் அருகே சிங்கனேந்தல் பகுதியில் வந்த போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். விபத்து குறித்து தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.