கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் திங்கள்கிழமை புதிதாக 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 9:10 pm

DIN

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் திங்கள்கிழமை புதிதாக 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரையில் 6415 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் 132 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் கடந்த 5 நாள்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு யாரும் இல்லாத நிலையே இருந்தது. இந்நிலையில் 2 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அவா்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 5,833 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் 3 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,836 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.