பறவைப் காய்ச்சல் தடுப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில், பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொட்பான முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: கேரளம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் ஏதும் செயல்படவில்லை. ஆனாலும், மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களை வனத்துறையினரும், கோழிச் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாக அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிக்கவேண்டும்.
நகா்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் கூட்டமாக பறவை இறப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவ அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் கோ.ஏஞ்சலா, துணை இயக்குநா் சி.சுப்பையா பாண்டியன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா்கள் செந்தில்குமாா் (ராமநாதபுரம்), பி.இந்திரா (பரமக்குடி), வனச்சரக அலுவலா் சு.சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...