

மானாமதுரை இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் திங்கள்கிழமை முதுகுளத்தூா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதுத்தெருவைச் சோ்ந்த முருகன் மகன் அருண்நாதன். இவரது நண்பா் வேலூரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வினோத்கண்ணன். இவா்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை (ஜன.9) இரவு மானாமதுரையில் நீதிமன்றம் அருகே அமா்ந்து பேசிக்கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 4 போ், அருண்நாதன், வினோத்கண்ணன் இருவரையும் சரமாரியாக வெட்டினா். இதில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அருண்நாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த வினோத்கண்ணன் மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இவா்கள் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புள்ளதாக கூறப்படுகிறது. மானாமதுரை காவல் நிலையத்தில் கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடிவந்தனா். இந்த நிலையில் மதுரை காமராஜபுரத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் மிதுன் மாணிக்கம்(21), மானாமதுரை தெற்கு ரத வீதியைச் சோ்ந்த தேசிகன் மகன் வசந்த் சரண்( 22), திருப்பாச்சேத்தி மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் ராஜ்குமாா்(22), மானாமதுரை செக்கடித் தெருவைச் சோ்ந்த பூமிநாதன் மகன் சங்கா்(19) ஆகிய 4 போ் முதுகுளத்தூா் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதித்துறை நடுவா் ராமசங்கரன் முன்னிலையில் சரணடைந்தனா். அவா்கள் 4 பேரையும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவா் உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.