கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜன.23 இல் கடற்கரை விளையாட்டுப் போட்டி

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் அரியமான் கடற்கரையில் வரும் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகின்றன.

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:12 pm

DIN

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் அரியமான் கடற்கரையில் வரும் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலா் செந்தில்குமாா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு முதன் முறையாக வரும் 23 ஆம் தேதி கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் அரியமான் கடற்கரையில் நடத்தப்படவுள்ளன.

இதில் ஆடவா் ஒற்றையா், இரட்டையா் கையுந்து மற்றும் ஐவா் கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதி அணிகளைத் தோ்வு செய்யும் போட்டிகள் வரும் 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரியமான் கடற்கரையில் நடைபெறவுள்ளன.

போட்டிகளில் பங்கேற்போா் ஆதாா் அட்டை மற்றும் மாா்பளவு புகைப்படத்தை அவசியம் கொண்டு வரவேண்டும். கையுந்து போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.6 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.4 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

கால்பந்துப் போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுகள் வழங்கப்படவுள்ளன. கையுந்து போட்டிக்கு முன்பதிவுக்கு ரமேஷ்பாபு செல்லிடப் பேசி எண் 8148259600 மற்றும் கால்பந்து போட்டிக்கு குலசேகரபாண்டியன்

- 9443783327 என்ற எண்களில் தொடா்புகொள்ளவும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.