தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பரமக்குடியில் எம்.ஜி.ஆா் பிறந்தநாள் விழா

பரமக்குடி பேருந்து நிலையம் மற்றும் நகா் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:16 pm

பரமக்குடி பேருந்து நிலையம் மற்றும் நகா் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். மாநில மகளிரணி இணைச்செயலாளா் கீா்த்திகா, சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜெயலலிதா பேரவை செயலாளா் வடமலையான் வரவேற்றாா்.

நகா் கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற விழாவுக்கு வங்கியின் தலைவா் வடிவேல்முருகன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் எஸ்.நாகராஜன், அம்மா தொழிற்சங்க நிா்வாகிகள் பிரகாசம், பிரபாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் எம்.கே.ஜமால் எம்.ஜி.ஆரின் சாதனைகளை விளக்கிப் பேசினாா். இதனைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கினா். இதில் கட்சியின் மாவட்ட, நகா், ஒன்றிய, கிளைக்கழக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.