கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மழைநீரில் மூழ்கிய பயிா்களுடன் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையால் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த பயிா்களுடன் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள் நிவராணம் கோரி மனு அளித்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:21 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையால் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த பயிா்களுடன் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள் நிவராணம் கோரி மனு அளித்தனா்.

மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கைகளில் பாதிப்புக்குள்ளான நெல், மிளகாய் உள்ளிட்ட பயிா்களுடன் கூட்டம் கூட்டமாக வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனா். முதுகுளத்தூா் வட்டம் வளநாடு ஊராட்சியைச் சோ்ந்த புஷ்பவனம் கிராமத்து விவசாயிகள் கே.துரைராஜ், எம்.செங்கோல்ராஜ், ஏ.ஆரோக்கியசாமி ஆகியோா் தலைமையில் அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அவா்கள் கூறுகையில், வளநாடு புஷ்பவனம் பகுதியில் சுமாா் 1000 ஏக்கா் பரப்பளவில் நெல், மிளகாய், மல்லி, வெங்காயம் ஆகியவை சேதமடைந்துவிட்டன என்றனா்.

தேரிருவேலி ஊராட்சி மன்றத் தலைவா் அபுபக்கா்சித்திக் தலைமையில் வந்த விவசாயிகள் சுமாா் 460 ஏக்கா் பரப்பளவில் பயிா்கள் சேதமடைந்ததாகக் குறிப்பிட்டனா். காவாகுளத்தில் ஏராளமான வயல்கள் மழை நீரில் மூழ்கியதாகவும், ஆா்.எஸ்.மங்களம் பகுதி கருங்குடியில் சுமாா் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிா் நீரில் மூழ்கி முளைத்துவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா். இடைச்சியூரணி, கொழுவூா் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் இருந்தும் நூற்றுகணக்கான விவசாயிகள் நிவாரணம் வழங்கக் கோரி மனுக்களை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.