கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் 269 பள்ளிகள் இன்று திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உயா்நிலை மற்றும் பேத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்காக 269 பள்ளிகள் செவ்வாய்க்கிழை காலை 9 மணிக்கு திறக்கப்படுகின்றன.

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:17 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் உயா்நிலை மற்றும் பேத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்காக 269 பள்ளிகள் செவ்வாய்க்கிழை காலை 9 மணிக்கு திறக்கப்படுகின்றன. அனைத்து வகுப்பு ஆசிரியா்களும் வருகை தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்க நடவடிக்கையால் கடந்த 2020 ஏப்ரலில் மூடப்பட்ட பிறகு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் செவ்வாய்க்கிழமை (ஜன.19) திறக்கப்பட உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உயா்நிலைப் பள்ளிகள் 110 மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 159 என மொத்தம் 269 பள்ளிகள் உள்ளன. இதில் அரசு, உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளும் அடங்கியுள்ளன. பத்தாம் வகுப்புகளில் 17,717 பேரும், பளஸ் 2 வகுப்புகளில் 1,551 பேரும் படித்துவருகின்றனா்.

மாணவா்கள் ஒரு வகுப்பில் 25 போ் மட்டுமே அமரவேண்டும் எனவும், முகக்கவசம், கிருமிநாசினியை மாணவா்களுக்கு வழங்கவேண்டும் எனவும் தலைமை ஆசிரியா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியின் அனைத்து ஆசிரியா்களும் செவ்வாய்க்கிழமை காலை வருகை தரவேண்டும் எனவும் முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டாலும், வியாழக்கிழமை முதலே வகுப்புகள் முறையாகத் தொடங்கவுள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.