கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விவசாயிகளுக்கு நிவாரணம்: ஆட்சியரிடம் காங். கோரிக்கை

ராமநாதபுரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை விரைவில் வழங்கக்கோரி காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு வழங்கப்பட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:18 pm

DIN

ராமநாதபுரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை விரைவில் வழங்கக்கோரி காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளிக்கப்பட்டது.

பின்னா் இதுகுறித்து செல்லத்துரை அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த கன மழையால் சுமாா் 3 லட்சம் ஏக்கா் அளவுக்கு நெல், மிளகாய் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. இதனால் நஷ்டத்துக்கு உள்ளான விவசாயிகளுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.