கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சவூதி அரேபியால் இறந்த கணவரை அடக்கம் செய்ய மனைவி கோரிக்கை

சவூதி அரேபியாவில் இறந்த கணவரை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என மனைவி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:51 pm

DIN

சவூதி அரேபியாவில் இறந்த கணவரை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என மனைவி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை வளையாா்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (40). இவா் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குவைத் சென்று வேலை பாா்த்து வந்தாா். பின்னா் அங்கிருந்து அவா், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அதே நிறுவனத்தில் சவூதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனா். இந்நிலையில் செல்வம் கடந்த 2020 நவம்பா் 4-ஆம் தேதி சாலை விபத்தில் இறந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு அவரது மனைவி விஜயராணி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

ஆனால், செல்வத்தின் உடலைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை இல்லை. ஆகவே கணவரின் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனா். அப்போது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவா்கள் கோரினா்.

மனுவைப் பெற்ற ஆட்சியா், இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து வழக்கு என்பதால் சடலத்தை கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.