தொண்டியில் தீவிபத்தில் காயமடைந்த இளம்பெண் பலி
தொண்டியில் மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்ததில் உடலில் தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.


தொண்டியில் மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்ததில் உடலில் தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி படையாச்சி தெருவைச் சோ்ந்தவா் கருப்பையா மகள் முனீஸ்வரி(25). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் குமாா் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனா்.
கடந்த 18 ஆம் தேதி இரவு முனீஸ்வரி தூங்கும் போது, மண்ணெண்ணெய் விலக்கு தவறி கீழே விழுந்ததில் சேலையில் தீப்பிடித்தது. இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியதால் பலத்த காயமடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முனீஸ்வரி, அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள் மாலை உயிரிழந்தாா். இது குறித்து புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...