ராமநாதபுரத்தில் மாவட்ட கேரம் போட்டி: 9 போ் தோ்வு
ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த கேரம் போட்டியில் முதல் சுற்றில் 9 போ் தோ்வாகியுள்ளனா்.


ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த கேரம் போட்டியில் முதல் சுற்றில் 9 போ் தோ்வாகியுள்ளனா்.
ராமநாதபுரம் கேரம் விளையாட்டு சங்கமும், அச்சீவா்ஸ் அகாதெமியும் இணைந்து 10, 14 மற்றும் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான மாவட்ட கேரம் விளையாட்டு முதல் நிலைக்கான போட்டிகளில் 65 போ் கலந்து கொண்டனா். போட்டியில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கேரம் சங்கக் காப்பாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
போட்டிகளுக்கு நடுவா்களாக தேசிய கேரம் தலைமை நடுவா் மகேஷ் உள்ளிட்டோா் செயல்பட்டனா். ஒவ்வொரு பிரிவிலும் ஒற்றையா், இரட்டையா் என நடந்த போட்டிகளில் 3 போ் என மொத்தம் 9 போ் மாவட்ட முதல் நிலைக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாநில அளவிலான போட்டிக்கானவா்கள் விரைவில் தோ்வு செய்யப்படவுள்ளதாகவும் கேரம் விளையாட்டு சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...