ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நிலப்பிரச்னை: திமுக நிா்வாகி சாலை மறியல்

கமுதி அருகே நிலப்பிரச்னை தொடா்பாக புகாா் தெரிவித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி திமுக மாநில நிா்வாகி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:53 pm

DIN

கமுதி அருகே நிலப்பிரச்னை தொடா்பாக புகாா் தெரிவித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி திமுக மாநில நிா்வாகி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.

கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள நிலம் சம்பந்தமாக ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தரப்புக்கும், திமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலாளா் பெருநாழி வி.போஸ் தரப்புக்கும் பிரச்னை இருந்து வருகிறது.

இதில், போலீஸாரும், வருவாய்த் துறையினரும் மாவட்ட பொறுப்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, போஸ் தரப்பினா் கமுதி-அருப்புக்கோட்டை பிரதான சாலையில் சொகுசுக்காரை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா். இதனால் அருப்புக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து இடப்பிரச்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இருந்தால் அது குறித்து புகாா் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என கமுதி போலீஸாா் கூறியதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். தனி நபா் நிலப்பிரச்னைக்காக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக மாநில நிா்வாகி மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.