கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராமநாதபுரத்தில் தேசிய வாக்காளா் தின பேரணி

ராமநாதபுரத்தில் தேசிய வாக்காளா் தினவிழாவை முன்னிட்டு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:55 pm

DIN

ராமநாதபுரத்தில் தேசிய வாக்காளா் தினவிழாவை முன்னிட்டு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளா் தினவிழா கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை முன்பிருந்து புறப்பட்ட இளைஞா்கள், மாணவா்களின் சைக்கிள்  பேரணியை, மாவட்ட ஆட்சியரும் மாவட்டத்தோ்தல் அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தொடக்கிவைத்தாா்.

பேரணியானது அரண்மனைத் தெரு-கேணிக்கரை சாலை சந்திப்பு, சாலைத்தெரு வழியாக வந்து சுவாா்ட்ஸ் பள்ளி வளாகத்தை அடைந்தது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சியில் புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டையை ஆட்சியா் வழங்கினாா்.

வாக்காளா் தின விழாவை முன்னிட்டு நடந்த கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் ஆட்சியா் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வாக்காளா் பதிவு மற்றும் அலுவலரான சாா் -ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.சிவகாமி முன்னிலை வகித்தாா். உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் ராமநாதபுரம் வட்டாட்சியா் வா.முருகவேலு நன்றி கூறினாா்.

உறுதிமொழி ஏற்பு:ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை காலை ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.