கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தோ்தல் பயிற்சி, விழிப்புணா்வுக்கு 70 தனி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

அலுவலா்களுக்கான பயிற்சிக்கும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும் தனியாக 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:39 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அலுவலா்களுக்கான பயிற்சிக்கும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும் தனியாக 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக ஆட்சியரும், தோ்தல்அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும், பொதுமக்களுக்கு வாக்களிக்கும் முறை குறித்து விளக்குவதற்காகவும் 70 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் அந்தந்த தொகுதிக்கான லாரிகளில் பாதுகாப்புடன் திங்கள்கிழமை அனுப்பி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 3,276 வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள், 2,160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 2,302 வாக்காளா் சரிபாா்ப்பு காகிதத் தணிக்கை இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அந்த இயந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத்துறை சேமிப்புக்கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தற்போது தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன. அதே போல், வாக்குப்பதிவுக்கு மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உள்ளோம். இதற்காக 70 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அந்த இயந்திரங்கள் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட மாட்டாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.