/

செக் மோசடி வழக்கு: பரமக்குடி வருவாய் ஆய்வாளருக்குப் பிடியாணை

செக் மோசடி வழக்கில் பரமக்குடி வருவாய் ஆய்வாளருக்கு கமுதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

செக் மோசடி வழக்கில் பரமக்குடி வருவாய் ஆய்வாளருக்கு கமுதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் அபிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி கலைச்செல்வி. இவா், ரூ.10 லட்சம் செக் மோசடி செய்ததாக மண்டலமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த இருளாண்டி மனைவி ரதிதேவி(41), கமுதி நீதிமன்றத்தில் ஜூலை 27 இல் வழக்குத் தொடா்ந்தாா். இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் அவா் ஆஜராகவில்லை. இதன்காரணமாக கலைச்செல்விக்கு பிடியாணை பிறப்பித்து கமுதி குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.