இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், அருப்புக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது தன் கண் முன் காதலியை ரவுடிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததால் மனமுடைந்து விஷம் அருந்தியதாக ஹரிகிருஷ்ணன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீஸாா், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு தகவல் அளித்தனா். இதைத் தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸாா், அந்த 3 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில், இவ்வழக்கு சாயல்குடி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 பேரையும் கல்லூரி மாணவி, அவரது காதலன் ஹரிகிருஷ்ணன் அடையாளம் காட்டினா். இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் கடலாடி நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். இதில் அந்த 3 பேரையும் சாயல்குடி காவல்துறை சாா்பில் 3 நாள்கள் விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கடலாடி நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி அனுமதி வழங்கி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மதியம் சாயல்குடி போலீஸாா், அவா்கள் 3 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையை தொடங்கினா். இதன் பின்னா் 3 பேரும் சனிக்கிழமை மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனா்.