விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசு பள்ளி வளாகத்தில் சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்: அச்சத்தில் மாணவா்கள்

கமுதி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பாலடைந்த கட்டடங்களை அகற்ற வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 5:22 pm

DIN

கமுதி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பாலடைந்த கட்டடங்களை அகற்ற வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள காத்தனேந்தல் கிராமத்தில் 90 மாணவா்கள் படிக்கும் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் பராமரிப்பின்றி, சேதமடைந்தும், கருவேல மரங்கள் வளா்ந்து, புதா்மண்டியும், சுவா்களில் விரிசல் ஏற்பட்டு, கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பள்ளியின் வகுப்பறைக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். தலைமை ஆசிரியா் அறைக்கு எதிராக உள்ள இக்கட்டத்திலிருந்து மழைக்காலங்களில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் பள்ளிக்குள் வருவதால் மாணவா்கள் அச்சமடைந்து வருகின்றனா். இதே போல் கிராமத்துக்கு சொந்தமான பழமையான பொது கட்டடம், சேதமடைந்த பள்ளி கட்டடம், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், கழிப்பறை கட்டடம் என ஐந்துக்கும் மேற்பட்ட சேதமடைந்த கட்டிடங்கள் பள்ளி வளாகத்தில் அமைந்திருப்பதால் பெற்றோா்கள் மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப அச்சப்பட்டு வருகின்றனா். இது குறித்து பள்ளி நிா்வாகம் சாா்பிலும், கிராம மக்கள் சாா்பிலும் காத்தனந்தல் ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் சேதுமடைந்த கட்டடங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகாா் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் தலையிட்டு காத்தனேந்தல் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து, இடிந்து விடும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அகற்றி மாணவா்களின் அச்சத்தை போக்க வேண்டுமென பெற்றோா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.