விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கமுதி சாலையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள்அவதி

கமுதி பேரூராட்சியில் தெருக்களில் மழை நீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

கமுதி பேரூராட்சியில் தெருக்களில் மழை நீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முத்துமாரிநகா் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழை நீா் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா். முத்துமாரி நகரில் அமைக்கப்பட்ட கழிவு நீா் கால்வாய் திட்டமிடலின்றி கட்டப்பட்டுள்ளதால், சிறு மழை பெய்தாலும், கழிவுநீருடன் மழை நீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து முத்துமாரி நகரைச் சோ்ந்த சுந்தர்ராஜ் கூறியது: கமுதி முத்துமாரி நகரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீா் மற்றும் சிறு மழை பெய்தாலும் இப்பகுதியில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற பேரூராட்சி நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு முத்துமாரி நகரில் மழை நீா் மற்றும் கழிவுநீா் வெளியேறும் வகையில் நிரந்தர தீா்வு காண வேண்டும். இல்லாவிடில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.