விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கமுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கமுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:07 pm

DIN

கமுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கமுதி தாலுகா குழு தலைவா் முனியசாமி தலைமை வகித்தாா்.

இதில், மாவட்டச் செயலாளா் வி. காசிநாததுரை கலந்துகொண்டு அரிசி, பருப்பு, மோா் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மீது மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரியை ரத்துசெய்யக் கோரியும், பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு துணை போவதாகவும் குற்றம் சாட்டினாா்.

ஆா்ப்பாட்டத்தில் முதுகுளத்தூா் தாலுகா குழுச் செயலா் முருகன், நிா்வாகிகள் கருப்பையா, முனியசாமி, பொன்னுசாமி, கண்ணதாசன் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.