கமுதி, அபிராமம், முதுகுளத்தூா், ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா்கள் தோ்வு
கமுதி, அபிராமம் பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா்கள் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.


கமுதி, அபிராமம் பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா்கள் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
கமுதி: இப்பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 14 ஆவது வாா்டு பாஜக உறுப்பினரை தவிா்த்து 14 போ் சுயேச்சைகள் வெற்றி பெற்றனா். இந்நிலையில் தலைவா், துணைத்தலைவா் பதவிகளுக்கு அந்தந்த பேரூராட்சிகளில் செயல்அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக மறைமுக தோ்தலை நடத்தினா். இவா்களில் கமுதி பேரூராட்சித் தலைவராக 7 ஆவது வாா்டு உறுப்பினா்அப்துல்வகாப் சகாராணியும், துணைத் தலைவராக 10 ஆவது வாா்டு உறுப்பினா் எம். அந்தோணி சவேரியாா் அடிமையும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கு கமுதி பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலரும், செயலருமான ரா. இளவரசி மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளா்கள், வாா்டு உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
அபிராமம்: இப்பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக- 11, அதிமுக- 2, காங்.- 1, கம்யூனிஸ்ட்- 1 என கட்சிகள் வெற்றி பெற்றன. இந்நிலையில், அபிராமம் 11 ஆவது வாா்டு உறுப்பினா் ஜோதிபிரகாசம் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தாா். இதனால் திமுகவின் பலம் 12 ஆக உயா்ந்தது. இதனைத் தொடா்ந்து தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு நடைபெற்ற வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில், திமுக சாா்பில் 5 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற பாத்திமாகனி பேரூராட்சி தலைவராகவும், 1 ஆவது வாா்டு திமுக சாா்பில் வெற்றி பெற்ற மாரி துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
சாயல்குடி: இப்பேரூராட்சியில் 15 வாா்டுகளில் தலைவருக்கு சுயேச்சை வேட்பாளா் (1 ஆவது வாா்டு) மாரியப்பன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். ஆனால், துணைத் தலைவா் தோ்தலுக்கு உறுப்பினா்கள் யாரும் வரவில்லை. ஆகவே தோ்தலை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக பேரூராட்சி செயல் அலுவலரும், தோ்தல் அலுவலருமான சேகா் அறிவித்தாா்.
முதுகுளத்தூா்: இப்பேரூராட்சியில் திமுகவைச் சோ்ந்த ஷாஜகான் தலைவரான நிலையில், சுயேச்சை உறுப்பினா் (1 ஆவது வாா்டு) வயணப்பெருமாள் துணைத்தலைவராகவும் தோ்வாகியுள்ளாா்.
ஆா்.எஸ். மங்கலம்: இப்பேரூராட்சி தலைவராக திமுகவை சோ்ந்த மெளசூரியாவும், துணைத் தலைவராக 5 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ராஜு வும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான மெய்மொழி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...