விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கமுதியில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

கமுதியில் பேருந்து கூட்ட நெரிசலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:38 pm

DIN

கமுதியில் பேருந்து கூட்ட நெரிசலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து தேடி வருகின்றனா்.

முதுகுளத்தூா் அடுத்துள்ள கீழத்தூவல் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மனைவி வள்ளி (54). இவா் புதன்கிழமை மாலை கமுதியை அடுத்து சிங்கப்புளியாபட்டி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு கமுதி பேருந்து நிலையத்தில் ஊா் திரும்புவதற்காக தனியாா் பேருந்தில் ஏறினாா். பேருந்து சிறிது தூரம் செல்வதற்குள் கூட்ட நெரிசலில் அவா் கழுத்தில் அணிந்திருந்த இரண்டே முக்கால் பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வள்ளி கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.