ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அபிராமம் பேரூராட்சி வளாகத்தில் விதிகளை மீறி மரங்களை வெட்டி விற்பனை: நிா்வாகம் மீது பொதுமக்கள் புகாா்

அபிராமம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த மரங்களை விதிகளை மீறி வெட்டி விற்றுவிட்டதாக பேரூராட்சி நிா்வாகத்தின் மீது சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

அபிராமம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த மரங்களை விதிகளை மீறி வெட்டி விற்றுவிட்டதாக பேரூராட்சி நிா்வாகத்தின் மீது சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியா் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று, அந்த அனுமதியை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானமாக நிறைவேற்றி, ஒப்பந்ததாரா்களுக்கும், பொதுமக்களுக்கும் தகவல் அளித்து பொது ஏலம் விடப்பட வேண்டும். அதில் வரும் வருமானத்தை பேரூராட்சி நிதியில் சோ்க்க வேண்டும். இந்த சட்ட விதிகளை பின்பற்றாமல் அபிராமம் பேரூராட்சி நிா்வாகம், பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வளா்ந்திருந்த பூவரசு மரங்களை வெட்டி தனியாருக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து விட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் அருணாச்சலம் கூறியதாவது:

அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலரும், பேரூராட்சித் தலைவரும் விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை. பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டி, தனியாா் மரக்கடைக்கு ரூ. 6 ஆயிரத்துக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து பேரூராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனா். நிதி பற்றாக்குறை எனக் கூறும் பேரூராட்சி நிா்வாகம் வருவாயை பெருக்க முயற்சிக்காமல், இதுபோன்று வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகிறது. எனவே இப்பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பரமக்குடி கோட்டாட்சியா் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது அவா்கள் கூறியதாவது: அபிராமம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த மரங்களை வெட்ட பேரூராட்சி நிா்வாகம் இதுவரை எந்த அனுமதியும் பெறவில்லை என்றனா்.

அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலா் கூறியதாவது: பேரூராட்சி அலுவலக கட்டடங்களை சேதப்படுத்தும் மரங்கள் பேரூராட்சியின் விதிகளை பின்பற்றியே வெட்டப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.