மன்னாா் வளைகுடாவில் விடப்பட்ட 16 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள்

மன்னாா் வளைகுடாவில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 16 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் வெள்ளிக்கிழமை கடலில் விடப்பட்டன.
மன்னாா் வளைகுடாவில் விடப்பட்ட 16 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள்

மன்னாா் வளைகுடாவில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 16 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் வெள்ளிக்கிழமை கடலில் விடப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் பகுதியில் மத்திய அரசின், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பச்சை வரி இறால்கள் உற்பத்தி செய்யப்பட்டு கடலில் விடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத் தலைவா் ஜி.தமிழ்மணி தலைமையில் 16 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் படகில் எடுத்துச்செல்லப்பட்டு மன்னாா் வளைகுடாவில் வெள்ளிக்கிழமை விடப்பட்டன. இதுவரை 5.80 கோடி பச்சை வரி இறால்கள் கடலில் விடப்பட்டதாக கடல் மீன் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில் மூத்த விஞ்ஞானி ஜான்சன், மீனவா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com